Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டத்தில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை காப்பாற்ற உள்ளே இறங்கிய 5 பேர் பலி!

மும்பை: மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டத்தில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை காப்பாற்ற உள்ளே இறங்கிய 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அது விலங்குகளின் கழிவுகளை சேமித்து பயோகேஸ் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கிணறு என போலீசார் தகவல். 6வது நபராக உள்ளே இறங்கியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் கிராமத்தில் உபயோகமற்ற கிணற்றில் நேற்று மாலை பூனை ஒன்று விழுந்துள்ளது. அந்த பூனையை காப்பாற்றுவதற்காக ஒருவர் கிணற்றில் இறங்கியுள்ளார். அந்தக் கிணற்றில் சேறு சகதி அதிகமாக இருந்ததால் அதில் அவர் சிக்கியுள்ளார்.

மேலும் கிணற்றின் விஷ வாயு தாக்கி அந்த நபர் மயக்கமடைந்துள்ளார். இதனை கண்டா மற்றொருவர் அவரைக் காப்பாற்ற கிணற்றில் இறங்கியுள்ளார். இவ்வாறாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ஒருவரையொருவர் காப்பாற்ற கிணற்றுக்குள் இறங்கி உயிரிழந்துள்ளனர்.

இதில் 5 பேர் பலியான நிலையில், 6வது நபராக உள்ளே இறங்கியவர் தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினரால் மீட்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையினர் கிணற்றில் விழுந்த உடல்களை மீட்கும் பணியைத் தொடங்கியபோது, அப்பகுதியில் மின்சாரம் இல்லாததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் கிணறு முழுக்க சேறு அதிகமாக இருந்ததால் உடல்களை மீட்கும் பணி நள்ளிரவு வரை நடந்ததாகக் கூறப்படுகிறது.

விலங்குகளின் கழிவுகளை சேமித்து பயோகேஸ் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கிணறு என போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.