Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மதுரையில் ‘மாஸ் கிளீனிங் ஒர்க்’: ஒரே நாளில் 6 டன் குப்பைகள் அகற்றம்

மதுரை: மதுரை செல்லூர் பகுதியில் நேற்று நடந்த ‘மாஸ் கிளீனிங் ஒர்க்’ எனும் தீவிர தூய்மை பணிகள் வாயிலாக, ஒரே நாளில் 6 டன் குப்பைகள் அகற்றப்பட்டது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் தீவிர தூய்மை பணி (மாஸ் கிளீனிங் ஒர்க்) தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சி மண்டலம் 2ல் செல்லூர் பகுதியில் கண்மாய் சாலை, குலமங்கலம் மெயின் ரோடு, 50 அடி மற்றும் 60 அடி சாலை, நாடகமேடை பகுதிகள், கல்யாண சுந்தரபுரம் 9வது தெரு, கட்டபொம்மன் நகர், அய்யனார் கோவில் மற்றும் மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தூய்மைப்பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகளை மேயர் இந்திராணி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதில் மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், வீடுகளில் தினந்தோறும் குப்பைகளை முறையாக சேகரிக்கவும், போக்குவரத்து சிரமமின்றி செல்வதற்கு சாலைகளில் சேரும் மணல், பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகள் உள்ளிட்டவற்றை சரிசெய்யவும், சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் உரிய அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார். நேற்றைய பணிகளில் 185 தூய்மைப் பணியாளர்கள், 8 மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஈடுபட்டனர்.

மேலும் தூய்மைப் பணிக்காக ஒரு பொக்லைன் இயந்திரம், 2 டிப்பர் வாகனங்கள், ஒரு ரோபோ வாகனம், 2 டிராக்டர்கள், 5 இலகுரக வாகனங்கள் மற்றும் ஒரு மண்கூட்டும் இயந்திரம் ஆகியவை பயன்படுத்தப்பட்டது. மரம், செடி அகற்றுதல், திடக்கழிவுகளை அகற்றுதல், தேவையற்ற பொருட்கள் மற்றும் குப்பை கொள்கலன்களில் உள்ள குப்பைகளை அகற்றுதல், கல், மண் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்றதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வார்டின் முக்கிய பகுதிகள் தோறும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதன்படி நேற்று ஒரேநாளில் 6 டன் குப்பை அகற்றப்பட்டன. இந்நிகழ்வில் துணை மேயர் நாகராஜன், நகர்நல அலுவலர் டாக்டர் இந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.