Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரையில் ஒரே நாளில் 11 பேர் உட்பட 53 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை

மதுரை: மதுரையில் ஒரே நாளில் 11 பேர் உட்பட 53 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெறுகின்றனர். மதுரையில் காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 53 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கோடை மழை பொழிந்து வருகிறது.

மதுரை மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், மழைநீா் சாலைகள் உள்பட பல்வேறு இடங்களில் தேங்கி உள்ளன. இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் கனமழைக்கு 8 மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. மதுரையில் சிறார்கள் உட்பட 52 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 6 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 முதல் 5 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்புவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

காய்ச்சலுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 25 படுக்கைகள் கொண்ட தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொசு வலையுடன் சிறப்பு படுக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் குழந்தைகளுக்கான சிறப்பு காய்ச்சல் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மழை காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 53 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில் மதுரை மாநகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் காய்ச்சல் குறித்த கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.