Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மது கடத்தியவர்களிடம் லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்

விழுப்புரம்: மது பாட்டில் கடத்தி சென்றவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு வழக்கு பதிவு செய்யாமல் விடுவித்த சிறப்பு எஸ்ஐ, ஏட்டு ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் புதுச்சேரி மாநில மதுபாட்டில், சாராயம் கடத்தலை தடுக்க சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நடமாடும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரும் மது, சாராயம் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் மது கடத்துபவர்களிடம் பணம் வசூலித்துக் கொண்டு விடுவிப்பதாகவும், மது பாட்டில்களை பறிமுதல் செய்து கொள்வதாகவும் புகார்கள் எழுந்தன.

இதனிடையே கோட்டக்குப்பம் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்ஐ காந்திமோகன், ஏட்டு கலையரசன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஓசூருக்கு காரில் மது கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர். ஆனால் அவர்கள் மீது வழக்கு பதியாமல் அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு மதுபாட்டில்களுடன் அவர்களை அனுப்பிவிட்டனர். இந்த தகவல் விழுப்புரம் எஸ்பி சரவணன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் விசாரணை நடத்தி சிறப்பு எஸ்ஐ காந்திமோகன், ஏட்டு கலையரசன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில் கடத்தி வந்தவர்கைள பிடித்து அவர்கள் மீது வழக்கு பதியாமல் பணத்தை பெற்றுக்கொண்டு விடுவித்த 3 மதுவிலக்கு ஏட்டுகள் அழகப்பன், காமராஜ், மாதவன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.