Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூடுவாஞ்சேரியில் 8ம் தேதி தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் அருண்ராஜ் தகவல்

செங்கல்பட்டு: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், இளம்பெண்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரத்தில் வரும் 8ம் தேதி தனியார் துறையின் சிறப்பு வேலைவாய்ப்பு நடக்கிறது. இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முன்னணி தனியார் துறை நிறுவனங்கள், திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, சுமார் 5000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர்.

இதில் பங்கேற்க, வேலை அளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு முற்றிலும் அனுமதி இலவசம். மேலும் வேலையளிப்பவர் மற்றும் வேலைநாடுநர்கள் தங்களின் விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இம்முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பி.இ, ஐடிஐ, டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்கள், பயன் பெறலாம். வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை. தகுதியானவர்கள், தங்களின் கல்வி சான்றிதழ்கள், நகல்கள், சுயவிவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பை பெறலாம்.

பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும், முகாம் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020 மற்றும் 9486870577 என்ற கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்ற கலெக்டர் ச.அருண்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.