Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோயம்பேடு காவல்நிலையத்தில் குவிந்து கிடக்கும் வாகனங்களால் போக்குவரத்து கடும் பாதிப்பு: போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

அண்ணாநகர்: குற்றச் சம்பவங்களில் பறிமுதல் செய்யப்படும் கார், பைக், ஆட்டோ மற்றும் கனகர வாகனங்கள் அனைத்தும் கோயம்பேடு காவல்நிலைம் அருகே குவித்துவைத்துள்ளனர். இதன்காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் வாகனங்கள் அனைத்தும் குவித்துவைக்கப்பட்டுள்ளதால் அவைகள் அனைத்தும் துருப்பிடித்து வீணாகி வருகிறது.

போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன்கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளே செல்லும் அரசு விரைவு பேருந்துக்கள் காலை, இரவு நேரங்கள் செல்ல முடியாமல் தவிக்கிறது. காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள பழைய வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள், பஸ் டிரைவர்கள் கூறியதாவது;

கோயம்பேடு காவல் நிலையம் அருகே பேருந்து திரும்பும் பகுதியில் பழைய வாகனங்களை குவித்துவைத்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகள் சிரமமின்றி சென்றுவர பழைய வாகனங்களை உடனடியாக அகற்றி போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். உயரதிகாரிகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும். இவ்வாறு கூறினர்.