Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோயிலுக்கு சென்றபோது விபரீதம்.. கர்நாடகாவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!!

பெங்களூரு: கர்நாடகாவில் கோயிலுக்குச் சென்ற கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொள்ளேகால் தாலுகாவுக்கு உட்பட்ட சிக்கின்துவாடி பகுதியருகே கார் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. அதில், மாலே மகாதேஷ்வரா மலைக்கு புனித பயணம் மேற்கொள்வதற்காக ஒரு குடும்பத்தினர் சென்றுள்ளனர். அப்போது, அவர்களுடைய கார் குறுகலான சாலையில் செல்லும்போது, எதிரேயிருந்து வந்து கொண்டிருந்த லாரி அவர்களுடைய வாகனம் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில், 2 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தில் உள்ள 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களின் உறவினர்கள் வருகைக்காக போலீசார் காத்திருக்கின்றனர். அவர்கள் வந்தபின்னர் உடல்கள் அடையாளம் காணப்படும். இந்த விபத்து பற்றி கொல்லேகல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், காரில் பயணம் செய்தவர்கள் மாண்டியா மாவட்டங்களில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது. இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.