திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை ராஜா, தாய் ஜானகி, மூத்த மகள் ஹேமிநேத்ரா ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மேலும் ஒரு சிறுமி மருத்துவமனையில் அனுமதி. விபத்து குறித்து காங்கேயம் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த தாய் ஜானகி ஈரோடு அருகே அரச்சலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். சொந்த ஊர் கேரளா சென்று விட்டு காங்கேயம் வழியாக அரச்சலூர் சென்றனர். அப்போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து நடத்த இடத்தில் காரில் இருந்து நகைகள் காவல்துறை எடுத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
