Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சூழ்ச்சி, வஞ்சகம், துரோகம் நடந்தது: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சூழ்ச்சி, வஞ்சகம், துரோகம் நடந்தது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை ஒட்டி ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் நம்பிக்கை துரோகம், சூது, சூழ்ச்சி யாரால் அரங்கேற்றப்பட்டது என்பது தெரியும்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த சூழ்ச்சி, வஞ்சகம், துரோகம் ஆகியவற்றை அனைவரும் பார்த்தோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வி ஏற்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அடம்பிடித்ததே தோல்விகளுக்கு காரணம். மனசாட்சி இல்லாமல் பேசுபவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம். தமிழ்நாடு மக்களும், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இருமொழிக் கொள்கையையே ஆதரித்தனர்.

அதிமுக ஓரணியில் ஒன்றிணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். தொண்டர்களின் எண்ணம் ஈடேறவேண்டும் என்றுதான் இன்னும் தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.