Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈரான் பல்கலைக்கழக வளாகத்திற்கு அரைகுறை ஆடையுடன் வந்த மாணவி கைது?

தெஹ்ரான்: ஈரான் பல்கலைக்கழக வளாகத்திற்கு அரைகுறை ஆடையுடன் வந்த மாணவியை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது. ஈரானில் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பாக பல கடுமையான விதிகள் உள்ளன. ஆனால் ஆடை கட்டுப்பாடுகளுக்கு எதிராக அங்குள்ள பெண்கள் கடந்த பல ஆண்டுகளாக குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், ஈரானில் இருந்து ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியாகி உலகையே அதிர வைத்துள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், ஈரானில் உள்ள ரன் இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழக வளாகத்தில் நின்றிருந்த அடையாளம் தெரியாத மாணவியை போலீசார் கைது செய்து அழைத்து செல்கின்றனர். இதனை பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் அமீர் மஹ்ஜூப், தனது சமூக ஊடக தளத்தில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சில சமூக ஊடக பயனர்கள் அந்த மாணவி தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டுமென்றே தனது ஆடைகளை கழற்றியதாக கூறுகின்றனர்.

இதுகுறித்த விசாரணைக்கு பின் வௌியான தகவலின்படி, இந்த சம்பவம் ரான் இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. சம்பந்தப்பட்ட மாணவி தனது ஆடைகளை அவிழ்த்துவிட்டு அரைகுறையாக சுற்றித் திரிந்தார். இந்த செயலுக்காக அந்த மாணவி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அந்த மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மாணவியை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு சர்வதேச அமைப்புகள் பலவும் கோரிக்கை விடுத்துள்ளன.