Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை

ஜகர்த்தா: இந்தோனேசியாவின் புளோரஸ் தீவுக்கூட்டத்தில் பாலி தீவு அமைந்துள்ளது. அழகிய கடற்கரைகள், வியக்க வைக்கும் மலைகள், பள்ளத்தாக்குகள் என இயற்கை எழில் கொஞ்சும் இந்த தீவில் 1,500 மீட்டர் உயர லிவோட்பி என்ற எரிமலை உள்ளது. உள்ளூர் மக்களால் லகி-லகி என்று அழைக்கப்படும் இந்த அதிபயங்கர எரிமலை அவ்வப்போது வெடித்து சிதறி வருகிறது. இது அனைவரையும் கலங்க செய்து வருகிறது. இந்நிலையில் நேற்றும் இந்த லகி-லகி எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதனால் வானில் சுமார் 5 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு கரும்புகை வெளியேறியது. மேலும் சுமார் 10 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு புகை மண்டலமாக மேலழுப்பி வானில் கலந்தது. இந்த புகை மண்டலம் காரணமாக இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்பட இருந்த 20க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தாகின. மேலும் பாலி தீவுக்கு விமான சேவை தடைப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிமலையை சுற்றி வசித்து வந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.