Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இந்தியர்கள் 3 குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்துக்கு வலுக்கும் கண்டனம்

நாக்பூர்: நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசுகையில், ‘ஒவ்வொரு குடும்பமும் சமூகத்தின் ஓர் அங்கம். சமூகத்தின் வளர்ச்சிக்கு குடும்பங்களின் பங்கு அவசியம். மக்கள் தொகை குறைந்து வருவது கவலையளிக்கிறது. ஏற்கனவே பல மொழி கலாச்சாரம் அழிந்து விட்டன. குழந்தை பிறப்பு விகிதம் 2.1 க்கும் கீழ் குறைவாக உள்ள சமூகங்கள் அழிந்துவிடும் என மக்கள் தொகை அறிவியல் காட்டுகிறது. மக்கள் தொகை குறைந்த சமூகம் தானாகவே அழிந்து விடும். எனவே ஒவ்வொரு தம்பதியும் குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்று கொள்ள வேண்டும்’ என்றார். இந்த கருத்து கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி கூறுகையில், \”நாங்கள் (பெண்கள்) தொடர்ந்து இனப்பெருக்கம் செய்யும் முயல்களா? வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில் ஏன் 3 குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று மோகன் பகவத் சொல்ல வேண்டும். மக்கள் அதிக குழந்தைகளை பெற்றெடுத்தால், பள்ளி கட்டணம், விமான கட்டணங்கள் மற்றும் பள்ளிக் கல்வி செலவுகளை அரசு குறைக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

சிவசேனா (உத்தவ் தாக்கரே) தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘முதலில் உங்கள் பாஜ உறுப்பினர்களுக்கு இந்த அறிவுரையை சொல்லுங்கள். உங்கள் அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த விரும்புகிறது. அதே சமயம் குழந்தை பிறப்பை அதிகரிப்பது பற்றி ஆர்எஸ்எஸ் பேசுகிறது. இது ஒரு பாசாங்குத்தனமான கொள்கை. பெண்கள் பாதுகாப்பு போன்ற விஷயங்களை ஆர்எஸ்எஸ் தலைவர் பேசாதது ஏன்? என்று சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். ஐதராபாத் எம்.பி. ஒவைசி, “நான் மோகன் பகவத்திடம் கேட்க விரும்புகிறேன். அதிக குழந்தைகளை பெற்றவர்களின் வங்கி கணக்கில் ₹1500 கொடுப்பாரா? இதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்துவாரா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.