Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா லலித் மோடி? வனுவாட்டு பாஸ்போர்ட்டை ரத்து செய்ய அந்நாட்டின் பிரதமர் ஜோதம் நபாட் உத்தரவு

போர்ட் விலா: ஐபிஎல் நிறுவனர் லலித் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வானாட்டு தீவு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது முறைகேடு புகார் எழுந்தது. இதையடுத்து, கைதில் இருந்து தப்பிப்பதற்காக 2010 ஆம் ஆண்டு வெளிநாடு தப்பிச்சென்றார். தற்போது லலித் மோடி, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அதனை தொடர்ந்து லலித் மோடி வானாட்டு தீவில் தஞ்சமடைந்துள்ளார். வானுவாட்டு தீவில் தஞ்சமடைந்த லலித் மோடி, அந்நாட்டின் குடியுரிமையையும் பெற்றிருந்தார். நிதி முறைகேடு வழக்கில் தப்பியோடிய முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடியை நாடு கடத்த இந்தியா போராடி வருகிறது.

இதனிடையே கடந்த வாரம் பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகிய லலித் மோடி, தனது இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில், லலித் மோடியின் பாஸ்போர்ட்டை உடனடியாக ரத்து செய்யுமாறு குடியுரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜோதம் நபாட் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்; லலித் மோடி குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்தபோது நடத்தப்பட்ட அனைத்து நிலையான பின்னணி சோதனைகள், இன்டர்போல் குற்றப்பின்னணியின் எந்த குற்றவியல் தண்டனையும் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் லலித் மோடி குறித்து எச்ச்சரிக்கை அறிவிப்பை வெளியிட இந்திய அதிகாரிகள் இன்டர்போலிடம் கோரிக்கை வைத்திருப்பது குறித்த தகவல் எனக்கு கிடைத்தது. அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் இரண்டு முறையும் இன்டர்போல் தரப்பில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இத்தகைய எச்சரிக்கையின் காரணமாக அவரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரை நாடு கடத்துவதற்கான கோரிக்கையை அந்நாட்டு அரசிடம் இந்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க லண்டனில் இந்திய தூரகத்தில் மனுசெய்துள்ள நிலையில் லலித் மோடிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.