2100-க்குள் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும்; புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் கணிப்பு
வாரணாசி: அமெரிக்காவின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி டி. சாக்ஸ் (Jeffrey D. Sachs), வரும் 2100-ஆம் ஆண்டிற்குள் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று கணித்துள்ளார். மேலும் இந்த நூற்றாண்டின் இறுதியில் அதாவது இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் சமயத்தில், சீனாவின் மக்கள் தொகையை விட, இந்தியாவின் மக்கள் தொகை 2 மடங்கு அதிகம் இருக்கும் எனவும் கூறி உள்ளார்.
2100- ஆண்டு நெருக்கத்தில் உலகின் அதிக மக்கள் தொகையை கொண்டிருக்கும் என்பதால், அது இந்தியாவிற்கு மிகப்பெரிய மனித வளம் மற்றும் உள்நாட்டு நுகர்வுச் சந்தையை வழங்கும். அதே போல வரும் 25 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகின் 2-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். வாரணாசியில் நடைபெற்ற Ancient Wisdom for Modern Challenges என்ற மாநாட்டில் பங்கேற்ற அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் பேசிய அவர் வரும் 2100-க்குள் உலகின் மொத்த மக்கள் தொகை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் ஆசியாவும் ஆப்பிரிக்காவும் சேர்ந்து தோராயமாக முக்கால்வாசி (75%) பங்கைக் கொண்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.


