Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

குணப்படுத்த முடியாத நோய் பாதிப்பு: கருணைக் கொலை செய்யும் மசோதாவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்!

லண்டன்: குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருணைக் கொலை செய்யும் மசோதாவுக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது. குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கான சட்ட மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் மசோதாவுக்கு ஆதரவாக 314 எம்.பி.க்களும், எதிராக 291 பேரும் வாக்களித்தனர்.

இதற்குப் பிறகு அந்த மசோதா மேலவைக்குக் கொண்டு செல்லப்படும். அங்கு அந்த மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளவோ, சட்டமாக்கலை தாமதப்படுத்தவோ மட்டும்தான் முடியும். பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் நிறைவேற்றிய மசோதாவை மேலவையால் நிராகரிக்க முடியாது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், பிரிட்டனின் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட, குணப்படுத்த முடியாத கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நபா்கள் மருத்துவா்களின் உதவியுடன் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள விண்ணப்பிக்க முடியும். அதற்கான மருந்தை தாங்களாகவே உட்கொள்ளும் திறன் நோயாளிகளுக்கு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.