Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேலை செய்த வீட்டில் கணவருடன் சேர்ந்து 30 சவரன் நகை திருடிய பெண் சிக்கினார்

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் நீரோஜா (37). இவர் கல்வித்துறையில் அதிகாரியாக உள்ளார். இவரது வீட்டு பீரோவில் வைத்திருந்த 30 சவரன் நகைகள் மாயமானது. வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது பீரோவின் லாக்கரை வீட்டு வேலை செய்த பெண் லட்சுமி பவானி என்பவர் திறந்து பார்ப்பது பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த பெண் மீது சந்தேகமாக இருப்பதாக வீடியோ ஆதாரத்துடன் புகார் கொடுத்தனர். இதன்படி, அண்ணாநகர் போலீசார் வழக்குபதிவு செய்து, வீட்டு வேலைக்கார பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது ‘’நகைகளை நான் எடுக்கவில்லை’’ என்றார்.

இதையடுத்து தீவிரமாக விசாரணை செய்தனர். இதில் லட்சுமிபவானி, அவரது கணவர் துக்ளக் பிரசாத் (38) ஆகியோர் சேர்ந்து 2022ம் ஆண்டு முதல் சிறுக, சிறுக 30சவரன் நகைகளை திருடியது தெரிந்தது. இந்த நகைகள் அனைத்தையும் அடமானம் வைத்து 2 லட்சத்தில் கார் வாங்கியுள்ளனர். இதன்பின்னர் பவானியை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கு உடந்தையாக இருந்த கணவர் துக்ளக் பிரசாத்தை இன்று காலை கைது செய்தனர். முன்னதாக இவர்களிடம் இருந்து 17 கிராம் நகைகளை மீட்டனர்.