Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க திமுக செய்த நடவடிக்கைகளை பட்டியலிட்ட முன்னாள் அமைச்சர்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை திமுக வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக பேசிய திமுக எம்.எல்.ஏ. ரகுபதி, 2006-ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றி, ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால், சட்டத் தரவுகள் உள்ளிட்ட அனைத்தும் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதற்கான தரவுகள் இல்லை என்ற காரணத்தால், அன்றைய உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் தமிழ் வழக்காடு மொழியாக வருவது தடுக்கப்பட்டது. எனவே, இதற்கான பிள்ளையார் சுழியைப் போட்ட முதல் தலைவர் கலைஞர் தான் என குறிப்பிட்டார். "மக்களுக்கு புரிதல் அவசியம்.. அதனால்தான் வரலாற்றை சொல்கிறோம்" என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க திமுக செய்த நடவடிக்கைகளை பட்டியலிட்ட முன்னாள் அமைச்சர் ரகுபதி பேசினார்.