Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குஜராத்தில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவமழை: மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கரைபுரண்டோடும் காட்டற்றுவெள்ளம்

குஜராத்: குஜராத் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் கரைபுரள்கிறது. குஜராத்தில் வரும் 22 ஆம் தேதி வரை கனமழை பெய்ய கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலம் தல்கஜர்த்தா பகுதியில் இடுப்பளவுக்கு தேங்கிய வெல்ல நீரில் வாகனங்கள் பாதி அளவிற்கு மூழ்கின. வெள்ளக்காடாக மாறிய பகுதியிலிருந்து மக்களை மீட்பு குழுவினர் மீட்டனர். மகுவாவில் இருந்து தல்கஜத்தா கிராமத்திற்கு செல்லும் சாலை வெல்ல நீரால் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால் பள்ளியில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்த 38 பள்ளி மாணவர்களை மீட்பு குழுவினர் படகு மூலம் மீட்டனர். அம்ரலி மாவட்டம் ராஜுலா தாலூகாவிலுள்ள கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 22 பேரை கடலோர காவல் படையினர் மீட்டனர். பாவ் நகரில் காட்டாறாக பாய்ந்த வெள்ளத்தில் சாலையின் இரும்பு தடுப்பு தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. குஜராத் மாநிலம் அம்ரேலியில் அரசு பேருந்து ஒன்று பள்ளத்தில் சிக்கியது. அம்ரேலியிலிருந்து கரியாதார் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து போரிக்காடா என்ற கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த 20 பேறும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பாவ் நகரில் வெளுத்து வாங்கிய மழையால் அணை நிரம்பி வெளியேற்றப்பட்ட உபரி நீர் காட்டாறாக பாய்ந்தது. அம்ரேலி மாவட்டம் ரெஜுலாவில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் திரண்டது. இதனால் சுற்றுவட்டார கிராமங்கள் இல்லத்தில் தத்தளித்தன. அம்ரேலி மாவட்டம் சாவர்குட்லா அருகே கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தோபா கிராமமே ஆறுகளாக மாறின. வீதிகளில் ஆறு காட்டாறாக பாய்ந்தது. போடாட் மாவட்டத்தில் கோடி தீர்த்த கனமழையால் உடாவலி ஆற்றில் வெள்ளம் பாய்ந்தது. ஆற்றில் கார் ஒன்று அடித்து சென்றது.