Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழக அரசின் தொழில்முனைவோருக்கான டெண்டர் வழிமுறைகள் தொடர்பான பயிற்சி..!!

சென்னை: தமிழக அரசின் தொழில்முனைவோருக்கான டெண்டர் வழிமுறைகள் தொடர்பான பயிற்சி 28.11.2024 காலை 10.00 முதல் மாலை 05.30 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், கீழ்க்கண்ட பயிற்சிகள் தொழில் முனைவோர் மேம்பாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் / குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள்) விண்ணப்பிக்கலாம்.

இப்பயிற்சியின் போது தலைப்புகள் கற்றுத்தருபவை கொள்முதல் செயல்முறை. விற்பனையாளர்களுக்கான GeM அறிமுகம்.

பொது GeM நன்மைகள். விற்பனையாளர்களுக்கான GeM On-boarding செயல்முறை, GeM கொள்முதல் முறைகள், GeM ஏல நடைமுறை மற்றும் ஏலத்தில் பங்கேற்பு நடைமுறை ஆகும். மேலும், பங்குபெறும் ஆண், பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in orன்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலகச் சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 032. 600 தொலைபேசி / கைபேசி எண்கள். 9080609808 /9677152265 / 9841693060. முன்பதிவு அவசியம், அரசு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.