Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தொழில் பார்ட்னர் சூனியம் வைத்திருப்பதாக கூறி பரிகார பூஜை செய்து தொழிலதிபர் மனைவியிடம் 76 கிராம் தங்கம் பறிப்பு: தொழிலை முடக்கிவிடுவதாக மிரட்டிய கோயில் பூசாரி கைது

சென்னை: தொழில் பார்ட்னர் சூனியம் வைத்திருப்பதாக கூறி கட்டுமான தொழிலதிபர் வீட்டில் பரிகார பூஜை செய்து 76 கிராம் தங்கம் நகைகள் மோசடி செய்த கோயில் பூசாரியை போலீசார் கைது செய்தனர். சென்னை மந்தைவெளி ஸ்ரீ வேங்கடட்ம டிரஸ்ட் பாக்கம் பகுதியை சேர்ந்தவர் எஸ்.பி.ஆர்.ரமேஷ்(56). தொழிலதிபரான இவர், பெரிய அளவில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான ெதாழில் சரியாக இல்லை என்று தனது நண்பர் ஒருவரிடம் கூறி வந்துள்ளார்.

அப்போது அந்த நபர், பெரம்பூர் பெரியார் நகர் பகுதியில் உள்ள கோயில் பூசாரி பூர்ண பிரகாஷ் என்பவர் சொல்வது எல்லாம் நடப்பதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து தனது நண்பர் மூலம் கோயில் பூசாரி பூர்ண பிரகாஷை நேரில் சந்தித்து பேசினர். அப்போது பூசாரி தான் அறநிலையத்துறையில் உறுப்பினராக உள்ளதாக கூறியுள்ளார். அதன் பிறகு தொழிலதிபர் எஸ்.பி.ஆர்.ரமேஷ் வீட்டிற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி கோயில் பூசாமி பூஜை பொருட்களுடன் வந்து யாகம் ெசய்த போது, எஸ்.பி.ஆர்.ரமேஷ் உடன் தொழில் பார்ட்னர் வளர்ச்சியை தடுக்கும் வகையில் ‘சூனியம்’ வைத்துள்ளார். அதை பரிகார பூஜை மூலம் தான் அதை சரிசெய்ய வேண்டும். இல்லை என்றால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறியுள்ளார்.

அதை கேட்டு தொழிலதிபர் எஸ்.பி.ஆர்.ரமேஷ் மனைவி 2 தங்க செயின், ஒரு வலையல் என மொத்தம் 76 கிராம் தங்க நகைகள் மற்றும் குடும்ப புகைப்படத்தை பூசாரி பூர்ண பிரகாஷிடம் கொடுத்துள்ளார். பரிகார பூஜை முடிந்து பிறகு பூஜைக்கு சொடுத்த 76 கிராம் தங்க நகைகளை திரும்ப கொடுக்காமல் ஏமற்றி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் 10 மாதங்கள் நடத்தும் நகைகளை கொடுக்காததால், நேரடியாக சென்று நகையை தொழிலதிபர் பூசாரியிடம் கேட்டுள்ளார். அதந்கு பூசாரி உங்கள் குடும்பத்தின் மீது ‘சூனியம்’ வைத்து உங்களை தொழிலை முடக்கி விடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சம்பவம் குறித்து எஸ்.பி.ஆர்.ரமேஷ் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்திய போது, தான் அறநிலையத்துறையில் உறுப்பினராக இருப்பதாக பொய் சொல்லி தொழிலதிபரை நம்ப வைத்து சூனியம் எடுப்பதாக 76 கிராம் நகைகளை மோசடி செய்தது உறுதியானது. அதைதொடர்ந்து போலீசார் நேற்று அதிரடியாக கோயில் பூசாரியான பூர்ணபிரகாஷை கைது செய்தனர். அவரிடம் இருந்து தொழிலதிபர் மனைவியிடம் பெற்ற 76 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டது.