Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை கடந்த மாதம் அதிரடியாக உயர்ந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 22ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,320க்கு விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். அதன் பிறகு தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ.9,015க்கும், பவுனுக்கு ரூ.920 குறைந்து ஒரு பவுன் ரூ.72,120க்கும் விற்பனையானது. தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத நிலையில் குறைந்தது நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த மகிழ்ச்சி என்பது ஒருநாள் கூட நீடிக்கவில்லை. நேற்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,045க்கும், பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு பவுன் ரூ.72,360க்கும் விற்பனையானது.