Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தங்கம் விலையில் அதிரடி; ஒரே நாளில் பவுனுக்கு ₹440 உயர்ந்தது

சென்னை: தங்கத்தின் விலை இன்று காலையில் அதிரடியாக பவுனுக்கு ரூ.440 உயர்ந்தது. தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து கடந்த மே 20ம் தேதி ஒரு பவுன் ரூ.55,200க்கு விற்கப்பட்டது. இது வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். அதன் பிறகு குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.53,440க்கு விற்கப்பட்டது.

13ம் தேதி ஒரு பவுன் ரூ.53,280, 14ம் தேதி ரூ.53,200 என விலை குறைந்தது. இன்று காலையில் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,705க்கும், பவுனுக்கு ரூ.440 அதிகரித்து ஒரு பவுன் ரூ.53,640க்கும் விற்கப்பட்டது. இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வழக்கமாக சனிக்கிழமையன்று காலையில் என்ன விலையில் தங்கம் விற்கிறதோ, மாலையிலும் அதே விலையில் தான் விற்கும். அதனால், இன்று காலை நிலவரப்படியே மாலையில் தங்கம் விற்பனையாக வாய்ப்பு உள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், சனிக்கிழமை விலையிலேயே நாளை தங்கம் விற்பனையாகும். திங்கட்கிழமை மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் மாற்றம் தெரியவரும்.