Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தோழி இறந்ததால் மனநலம் பாதிப்பு: தீக்குளித்து இளம்பெண் தற்கொலை

திருவெறும்பூர்: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த அசூரை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா(32). இவரது தங்கை பவித்ரா(27). அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். 2 குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் வெல்டராக உதயகுமார் வேலை பார்த்து வருகிறார். பவித்ரா வீட்டின் அருகே வசித்து வந்த அவரது தோழியான சங்கீதா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் இருந்து பவித்ரா மனநிலை பாதித்து காணப்பட்டார்.

நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பவித்ரா தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து வரும் வழியிலேயே பவித்ரா இறந்து விட்டதாக ெதரிவித்தனர். இதுகுறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.