Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் டிஜிட்டல் முறையில் அபராதம்! : சென்னை மாநகராட்சி புதிய முயற்சி

சென்னை : பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டட கழிவுகளை கொட்டும் நபர்களுக்கு அபராதம் விதிக்கும் முறையை டிஜிட்டல் மயமாக்க சென்னை மாநகராட்சி திட்டம் வகுத்துள்ளது. சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் பொது இடங்களில் குப்பை, கட்டட கழிவுகளை கொட்டுவது போன்ற சட்டவிரோத விதிமீறல் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது சென்னை மாநகராட்சியால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.பொது மற்றும் தனியார் இடங்களில் தூக்கி எறியப்படும் குப்பைகள், வாகனங்களில் இருந்து கொட்டப்படும் குப்பைகளுக்கான அபராதத் தொகை 500 ரூபாயில் இருந்தது 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.தனிநபர் இல்லங்களில் கொட்டப்படும் குப்பைக்கு 100 ரூபாயாக இருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விதிகளை மீறி குப்பைகளை கொட்டுபவர்கள், அதனை எரிப்பவர்கள் மீது ஸ்பாட் பைன் (spot fine) வசூலிக்கும் சோதனை முறையை சென்னை மாநகராட்சி நேற்று தொடங்கியது. அதன்படி, போக்குவரத்து காவலர்கள் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க பயன்படுத்தும் டிஜிட்டல் கருவி போன்ற புதிய டிஜிட்டல் கருவியை சென்னை மாநகராட்சி சோதனை முறையில் பயன்படுத்தி வருகிறது. முதல்கட்டமாக 500 கருவிகளை கொள்முதல் செய்துள்ளது. இந்த கருவிகள் 15 மண்டலங்களில் வழங்கும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளது.டிஜிட்டல் முறையில் அபராதம் விதிக்கும் நடைமுறை விரைவில் அனைத்து பகுதிகளிலும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.