Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பிரான்சில் சிறுவர்கள் சோசியல் மீடியா பயன்படுத்த விரைவில் தடை: அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உறுதி!!

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதை தடுக்க விரைவில் விதிகள் அமல்படுத்தப்படும் என அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்; பிரான்சில் சிறுவர்கள் செல்போனில் சமூக வலைத்தளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் சிறுவர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள். மேலும் சிறுவர்கள் வன்முறை செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். சிறுவர்கள் நமது நாட்டின் மனித வளமாக இருக்கும் நிலையில் சமூக வலைத்தளம் மூலமாக அவர்கள் கெட்டு சீரழிவது கண்கூடாக தெரிகிறது.

இந்த நிலையில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக தடை விதிக்கக்கோரி ஐரோப்ப ஒன்றியத்திடம் புகார் அளித்துள்ளேன். இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியமே முடிவெடுக்கும் என நம்புகிறேன். இல்லையெனில், அவர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை எனில் ஒரு சில மாதங்களில் பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்துவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.