Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மீனவர்கள் நலனில் அக்கறை மிகுந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் ராஜகண்ணப்பன் புகழாரம்

கன்னியாகுமரி: மீனவர்கள் நலனில் அக்கறை மிகுந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் ராஜகண்ணப்பன் புகழாரம் சூட்டினார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உலக மீனவ தினவிழா பொதுக்கூட்டம் நடந்தது. பொது கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியதாவது:- மீனவ மக்களுக்காக ராமநாதபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க மீனவர் மாநாடு நடத்தியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னையில் வெள்ளம் வந்த போது ஒரே நாளில் வெள்ளத்தை அகற்றி மின்சாரம் வழங்கியவர் நமது முதல்வரின் ஆட்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள். மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்த்தி தந்தவர் முதல்வர் தான். மீனவர் நலனில் எப்போதும் உறுதியாக இருப்பவர் முதல்வர் தான் அதனை செயல்படுத்தியும் காட்டியுள்ளார். சாதி மதமின்றி இயங்கும் ஒரு இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆனாலும் சரி, திராவிட முன்னேற்ற கழகமானலும் சரி திராவிட கட்சிகள் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று நிர்பந்தம் உள்ளது.

முதல்வர் சிறப்பான திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். மீனவர் மீது அக்கறை உள்ளவர்கள் என இந்தியாவில் வேண்டுமானால் காங்கிரஸ் கட்சி என கூறலாம் ஆனால் தமிழகத்தில் தி.மு.க. தான் என்பதனை நீங்கள் உணர வேண்டும். ஒன்றிய அரசோடு இணக்கமாக இருக்க வேண்டும். ஆனால் 1 ரூபாய்க்கு 29 பைசா தரும் மத்திய அரசு நமக்கு வேண்டாம் என்று கூறினார்.