Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இங்கிலாந்தில் குன்றில் இருந்து உருட்டிவிடப்பட்ட சீஸ் ரோலை பிடிக்கும் போட்டி: உருண்டு, புரண்டு, குட்டிக்கரணம் போட்டு பாய்ந்த போட்டியாளர்கள்

லண்டன்: இங்கிலாந்தில் குன்றில் இருந்து உருண்டு விடப்படும் சீஸ் ரோலை பிடிக்க போட்டியாளர்கள் உருண்டு, புரண்டு ஓடிவரும் வினோத போட்டி வியப்பையும், திகைப்பையும் ஒருசேர அளிப்பதாக உள்ளது. குன்றின் சரிவில் அரக்க பறக்க ஓடி கீழே விழுந்து குட்டிக்கரணம் போட்டு இவர்கள் கூட்டமாக ஓடுவது சக்கர வடிவில் உருட்டிவிடப்பட்ட பாலாடை கட்டி எனப்படும் சீஸ் ரோலை பிடிப்பதற்காக தான். இங்கிலாந்தின் க்ளாசெஸ்டர்ஷைரில் தான் இந்த வினோத போட்டி நடத்தப்படுகிறது. 26 டிகிரி சாய் கோணத்தில் 180 உயரம் குன்றின் மேல் பகுதியில் இருந்து சக்கர வடிவிலான நான்கு கிலோ எடை கொண்ட சீஸ் உருட்டி விடப்படுகிறது.

அதை ஒரே நேரத்தில் சுமார் 100 பேர் அடித்து பிடித்து கீழே விழுந்து வாரி, உருண்டு, புரண்டு, குட்டிக்கரணம் போட்டு பிடிக்க பாய்கின்றனர். முதலில் உருட்டி விடப்படும் சீஸை பிடிப்பது என்பது இயலாத காரியம் என்பதால் குன்றின் அடிவாரத்தில் உள்ள எல்லை கோட்டை முதலில் வந்தடைபவர்களே வெற்றியாளராக அறிவிக்கப்படுகின்றன. 19-ம் நூற்றாண்டு முதல் நடத்தப்படும் இந்த பாரம்பரிய போட்டியில் ஜெர்மனியை சேர்ந்த யூடியூபர் தொடர்ந்து 2வது முறையாக வெற்றி பெற்றார். குன்றின் சரிவில் உருண்டு புரண்டு வரும் போது கை, கால்கள், கழுத்தில் காயங்கள், சுளுக்குகள் ஏற்படும் ஆபத்துகள் அதிகம் இருந்தபோதிலும் உற்சாகம் குன்றாத போட்டியாளர்களின் பங்கேற்புகள் குறைவது இல்லை என்றும், இதுவரை உயிரிழப்பு நேரவில்லை என்றும் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.