Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிழக்கு கடற்கரை சாலையில் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு!!

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். கிழக்கு கடற்கரை சாலையில் விரைவான பயணத்தை உறுதி செய்யும் வகையில் மாநில நெடுஞ்சாலைத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் திருவான்மியூர் முதல் அக்கறை வரை 10.5 கிலோமீட்டர் நீளத்திற்கு ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 16 கிலோமீட்டர் தொலைவிற்கு உயர்மட்ட மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.முன்னதாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் உள்ள தேர் செல்வதற்கான வழிகளையும் அங்கு மேற்கொள்ளப்பட உள்ள சாலை விரிவாக்க பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் 2 மீட்டர் அகலத்திற்கு அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பார்வையிட்ட அமைச்சர் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் செல்வராஜ், சென்னை மாவட்ட ஆட்சியர் சென்னை மாவட்ட ஆட்சியர், ரஷ்மி சித்தார்த் ஜகடே மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பல உடனிருந்தனர்.