சென்னை: திமுக தலைவரான மு.க.ஸ்டாலின், தனக்கு பரிசாக வழங்கப்பட்ட 10,000 புத்தகங்களை பல்வேறு கல்லூரிகள் மற்றும் நூலகங்களுக்கு அண்ணா அறிவாலயத்தில் வைத்து இன்று வழங்கினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்தவர்கள் அளித்த புத்தகங்களை, தங்களுக்கு வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
இதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தூய சவேரியார் (தன்னாட்சி) கல்லூரி நூலகத்திற்கு 5,000 புத்தகங்கள், தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர், ரஹ்மானியா கல்வி கூடம் வாட் பயிற்சி மையத்திற்கு 3,000 புத்தகங்கள், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், அரசு கலை கல்லூரி நூலகத்திற்கு 2000 புத்தகங்கள் என மொத்தம் 10,000 புத்தகங்கள் இன்று அந்தந்த நூலக நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார். திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் அவர்கள், இதுவரை தனக்கு கொடுக்கப்பட்ட புத்தகங்களில் இதுவரை 7,10,000 (7 இலட்சத்து 10 ஆயிரம்) புத்தகங்களை பல்வேறு கல்லூரி மற்றும் நூலகங்களுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


