Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்

சென்னை: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்களின் மூர்க்கத்தனமான கருத்துக்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அவர் என்ன சொல்கிறார் என்பது அவருக்கு உண்மையிலேயே புரிகிறதா அல்லது அவருக்குக் கொடுக்கப்பட்ட ஒரு ஸ்கிரிப்டை மீண்டும் சொல்கிறாரா? கல்வியில் ஒன்றிய பாஜக அரசின் அரசியல் தலையீடு மன்னிக்கப்படாது. மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த துரோகத்தை நினைவில் கொள்வார்கள்.

தேசிய கல்விக்கொள்கை என்பது கல்விக் கொள்கை அல்ல RSS-இன் நிகழ்ச்சி நிரல். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அதை முற்றிலுமாக நிராகரிக்கிறது. நமது திமுக எம்.பி.க்கள் கல்விக்காகவும் நமது மாநிலத்தின் உரிமைகளுக்காகவும் போராடுகிறார்கள். நீதி வெல்லும் வரை இந்தப் போராட்டம் நிற்காது.