தென்காசி: தென்காசி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வந்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்துவந்த மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்தது மெயின் அருவி மற்றும் ஐந்து அருவி பழைய குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே மெயின் அருவியில் மூன்று நாட்களாக குளிக்க தடைவிதிக்கபட நிலையில் இன்று 4 வது நாளாக தடை நீடிக்கிறது .புலியருவி,சிற்றருவியில் மட்டும் ஒரளவு தண்ணீர் குறைவாகஉள்ளதால் அங்கு பொதுமக்கள் குளிக்க அனுமதிகப்பட்டனர். தடை செய்யப்பட பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.