Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஒப்பந்த நிறுவனங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் திடீர் நெருக்கடி: 1700 நிறுவனங்களின் ஒப்பந்தங்களும் அதிரடியாக ரத்து!

வாஷிங்டன்: அமெரிக்காவில் அரசு பணிகளுக்காக அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் செலவுகளை குறைக்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் நெருக்கடி அளித்து வருகிறது. General Dynamics, Deloitte, Accenture, Booz Allen, Guidehouse உள்ளிட்ட நிறுவனங்கள் தொழில்நுட்பம், ஆலோசனை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட தொழில்முறை சேவைகளை ஒப்பந்தம் அடிப்படையில் அரசுக்கு வழங்கி வருகின்றன. இந்த ஒப்பந்த பணிகளுக்காக மட்டும் அந்நாட்டு அரசு ஆண்டுதோறும் 65 லட்சத்து 27 ஆயிரத்து 426 கோடி ரூபாய் செலவிட்டு வருகிறது. செலவு குறைப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வரும் டிரம்ப் நிர்வாகம் 1,700 நிறுவனங்களின் ஒப்பந்த பணிகளை இந்த வார தொடக்கத்தில் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், அதிகமான தொகைக்கு ஒப்பந்த போடப்பட்டுள்ள Booz Allen, Accenture உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது கட்டணங்களை இம்மாத இறுதிக்குள் குறைக்க வேண்டும் என டிரம்ப் அரசு பொது சேவைகள் துறை உத்தரவிட்டுள்ளது. அரசுக்கு வழங்கும் சேவைகள் ஆலோசனைகள் என்ன?, அவ்வற்றிற்கு விதிக்கப்படும் கட்டணத்திற்கான விளக்கம் மற்றும் கட்டணங்களைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. எச்சரிக்கப்பட்டுள்ள Accenture நிறுவனம் அமெரிக்காவில் ஈட்டும் அதன் மொத்த வருமானத்தில் அரசின் பணி ஒப்பந்தங்கள் மூலம் மட்டும் 16% வருவாய் பெறுகிறது. டிரம்ப் அரசு பதவியேற்ற பிறகு அரசு ஒப்பந்த பணிகள் குறையும் என தகவலால் அந்த நிறுவனத்தின் பங்கு விலை கடும் சரிவை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.