Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கட்டுமான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு..!!

சென்னை: கட்டுமான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய தொழிலாளர்கள் இறந்தால் அவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கிட பல்வேறு திட்டங்களை வெவ்வேறு, கால கட்டங்களில் அமலாக்கம் செய்து வந்தது. பின்னர் மேற்குறித்த அரசு ஆணைகளின்படியான எல்லா நிவாரண திட்டங்களையும் ஒருங்கிணைத்து அரசாணை நிலை எண் 471 நிதி (முதலமைச்சர் பொது நிவாரணம் மற்றும் நிதித்துறை விபத்து நிவாரணம் வழங்கிட ஒருங்கிணைந்த ஒரு திட்டமாக “விபத்து நிவாரண திட்டம்”என்ற திட்டத்தினை அரசு அறிவித்தது.

இந்த விபத்து நிவாரண திட்டத்தின்படி ஒரு தொழிலாளி அவர் தன்னுடைய தொழிலில் ஈடுபட்டிருக்கும் போதோ அல்லது அத்தொழில் சார்ந்த இதர பணிகளில் ஈடுபட்டிருக்கும் போதோ விபத்துக்குள்ளாகி இறந்தாலோ அல்லது பாதிக்கப்பட்டாலோ கீழ்க்கண்டவாறு நிவாரண உதவித்தொகை வழங்கிடலாம். அந்த வகையில் சட்டப்பேரவை அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் கட்டுமான தொழிலாளர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிவாரண தொகை உயர்த்தப்பட்டுள்ளது. நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது.