Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவை வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பெண் காட்டு யானை உயிரிழப்பு!

கோவை: கோவை மருதமலை வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பெண் காட்டு யானை உயிரிழந்தது. கோவை மருதமலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் ஒரு தாய் யானையும், அதன் குட்டியும் நீண்ட நேரம் அசையாமல் நின்று கொண்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத் துறைக்குத் தெரிவித்தனர். கோவை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானைகளை கண்காணித்து வந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக தாய் யானை உடல்நலக் குறைவால் மயங்கி விழுத்தது. யானையின் நிலைமை மோசமடையவே, வனத் துறையினர் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோருக்கு தகவல் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின் படி, கால்நடை மருத்துவ குழுவினரும், கோவை வனக் குழுவினரும் இணைந்து தாய் யானையை தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் தாய் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், படுத்துக் கிடக்கும் பெண் யானையை நிற்க வைத்து சிகிச்சை அளிப்பதற்காக, கும்கி யானை துரியனின் உதவியுடன்  பெண் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர்.

பின்னர் உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டுள்ள பெண் யானையை, தற்காலிக குட்டையில் இறங்க வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து நோய் எதிர்ப்பு மருந்துகள்,குளுக்கோஸ் கொடுத்தும் யானையின் உடல்நிலை பலனளிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக உடல் நலக்குறைவால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பெண் காட்டு யானை உயிரிழந்தது. கும்கியானையுடன் வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.