மும்பை: இந்தியாவுக்கு சீனா மிகப்பெரும் ஆபத்தாக திகழ்வதாகவும், பஹல்காம் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு வழங்கிய துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளை புறக்கணித்தது போல் சீன தயாரிப்புகளை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று மாரிகோ நிறுவனர் ஹர்ஷ் மாரிவாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு சீனா பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் ஆதரவு வழங்கி வருவது வெளிப்படையானது. ஆனால், பாகிஸ்தானுக்கு ஆதரவு வழங்கிய மாற்ற நாடுகளின் தயாரிப்புகளை புறக்கணிப்பது போல் சீனாவை நாம் புறக்கணிக்கிறோமா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இந்தியாவின் இறையாண்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் சீனா குறித்து நீண்ட கால அடிப்படையில் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

