Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் ஜூன் 27, 28ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூன் 28ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஜூன் 27ல் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில, மணடல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 27.6.2025 வெள்ளிக் கிழமை காலை 10 மணிக்கு கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

28.6.2025 சனிக் கிழமை காலை 10 மணியளவில், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளர், மண்டலச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது. இக்கூட்டங்களில் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயல்பாடுகள் குறித்தும், வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிறுத்தி களப்பணி ஆற்றுவது குறித்தும், கருத்துப் பரிமாற்றமும், ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது. ஆகவே கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கை அளித்துள்ளார்.