Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,680க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.9,210க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.119க்கு விற்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.

இதனையடுத்து, தங்கம் விலை கடந்த ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த 17ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 குறைந்து ஒரு கிராம் ரூ.9,200க்கும், பவுனுக்கு ரூ.840 குறைந்து ஒரு பவுன் ரூ.73,600க்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்று முன்தினம்(18ம் தேதி) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,000க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.9,250க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.122க்கும் ஒரு கிலோ ரூ.1,22,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று ரூ.400 உயர்ந்த தங்கத்தின் விலை, இன்று ரூ.440 குறைந்துள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.9,210க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.119க்கு விற்கப்படுகிறது.