சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.69,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 12-ந்தேதி மளமளவென சரிந்து ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்துக்கு வந்தது. அதன் பின்னர் விலை சற்று உயர்ந்து இருந்த நிலையில், கடந்த வாரம் விலை சரிவுடன் விற்பனையானது. இந்த நிலையில் நேற்று (மே.19) மீண்டும் விலை அதிகரித்து இருந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.70,040க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,755க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.69,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45 குறைந்து கிராம் ரூ.8,710க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.1 குறைந்து கிராம் ரூ.108க்கு விற்பனை செய்யப்படுகிறது.
