Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னை மயிலாப்பூரில்கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் திறக்கப்பட்ட பாஜக அலுவலகத்துக்கு சீல்வைப்பு

சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்தில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் தேர்தல் பொறுப்பாளர்களை தேர்வு செய்தல் மற்றும் தேர்தல் அலுவலகம் திறக்கும் பனியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் பாஜகவினரும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பொறுப்பு அலுவலகம் திறந்து வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று சென்னை மயிலாப்பூர் ஆர்கே மடம் இருக்க கூடிய சாலையில் கபாலீஸ்வார் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தென் சென்னை பாராளுமன்ற பொறுப்பாளர் ராஜா தலைமையில் மயிலாப்பூர் பாராளுமன்ற தொகுதி அலுவலகம் திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரையில் பாஜகவின் மூத்த தலைவர்களான கராத்தே தியாகராஜன், கருநாகராஜன் போன்றவர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில் வணிக ரீதியாக பயன்பாட்டுக்கு என கூறி கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து அதில் அரசியல் கட்சி அலுவலகம் திறக்கபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி புகாருக்கு உள்ளான சூழலில் இன்று காலை தென்சென்னை மாவட்ட இணை ஆனையர் ரேனுகா தேவி தலைமையிலான அறநிலையத்துறை அதிகாரிகள் நேரடியாக அந்த கட்டிடத்திற்கு சென்று அதனை முழுவதுமாக பூட்டி சீல் வைத்தனர்.