Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னை விமானநிலையத்தில் மின்விளக்குகள் வழியாக அருவி போல் கொட்டும் மழைநீர்: பயணிகள் அதிர்ச்சி

சென்னை: சென்னை விமானநிலையத்தில் மின்விளக்குகள் வழியாக அருவி போல் மழைநீர் கொட்டுவதால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் 1 மணி நேரம் பெய்த அடைமழை காரணமாக முதலாவது மையத்தில் பயணிகள் செல்ல கூடிய பகுதியில் மேற்க்கூரையிலிருந்து மின்விளக்குகள் இருக்கும் பகுதியில் அருவிபோல் மழைநீர் கொட்டியது. இதனை கண்ட விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், இப்பகுதியில் விமான பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு வேறு வழியில் அனுப்பி வைக்கப்பட்டனர். மழை நீர் அதிகரிக்கும் நிலையில் அதனை தடுத்து நிறுத்துவதற்கும் விமான நிலைய அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். மேலும் விமான நிலையத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால் விமான போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் மழைநீர் சில பகுதிகளில் வருவதால் அதனை சீரமைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.