Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விசிக தலைவர் திருமாவளவன் மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தேர்தல் பிரச்சாரத்தில் 4 நிமிடம் அதிகமாக பேசியதாக திருமாவளவனுக்கு எதிராக தொடாப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக, கடந்த 2019 ம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி அரியலூர் மாவட்டம் இலந்தை கூடம் பேருந்து நிறுத்தம் அருகில், தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது விதியை மீறி 4 நிமிடங்கள் அதிகமாக பிரச்சாரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருமாவளவனுக்கு எதிராக அரியலூர் மாவட்டம் வெங்கனூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. அரியலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரி திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி பி.வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது; திருமாவளவன் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொண்டு அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.