Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பார்படாஸ் டெஸ்ட்; வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 190 ரன்: 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா திணறல்

பார்படாஸ்: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பார்படாசில் உள்ள பிரிட்ஜ்டவுனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு சுருண்டது. டிராவில் ஹெட் 59 ரன், கவாஜா 47 ரன் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டும், ஷமர் ஜோசப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 72 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு ரோஸ்டன் சேஸ், ஷாய் ஹோப் ஜோடி இணைந்து 67 ரன்கள் சேர்த்தது. ஷாய் ஹோப் 48 ரன்னும், ரோஸ்டன் சேஸ் 44 ரன்னும் எடுத்தனர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணியும் முதல் இன்னிங்சில் 190 ரன்களுக்கு சுருண்டது.

ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட், ஹேசல்வுட், பாட் கம்மின்ஸ், வெப்ஸ்டர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 10 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 2வது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் சாம் கோன்ஸ்டாஸ் 5 ரன்கள், உஸ்மான் கவாஜா 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேமருன் கிரீன் 15 ரன்களும், ஜோஷ் இங்லிஸ் 12 ரன்களும் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினர்.ஆட்ட நேர முடிவில் டிராவிஸ் ஹெட் 13 ரன்களுடனும், பியூ வெப்ஸ்டர் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றால் 2வது இன்னிங்ஸில் குறைந்த பட்சம் 200 ரன்கள் எடுக்க வேண்டும்.