Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெங்களுர் - காரைக்குடி ரயில் சோதனை அடிப்படையில் ஆக.14 முதல் இயக்கம்

சென்னை: பெங்களுர் - காரைக்குடி ரயில் சோதனை அடிப்படையில் ஆக.14 முதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களுர் - காரைக்குடி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் விட வேண்டும் என்று கிழக்கு கடற்கரை இரயில் பயணிகள் கூட்டமைப்பு (ECRPF) காரைக்குடி சேம்பர் ஆப் காமர்ஸ் கோரிக்கை வைத்தது. மேலும் டெல்லியில் ரயில்வே போர்டு சேர்மன் அவர்களுக்கு ECRPF& KCRPWA சார்பில் 8.8.2024 கொடுத்த கடிதத்திலும் இதே கோரிக்கையை வைத்தது. இதன் அடிப்படையில் சோதனை அடிப்படையில் வரும் ஆக.14ம் தேதி மற்றும் ஆக.17ம் தேதி ஆகிய நாட்களில் வண்டி என்06295 இரவு 9.30 மணிக்கு மைசூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.45க்கு காரைக்குடி சந்திப்பு வருகிறது.

காரைக்குடியிலிருந்து ஆக.15 வியாழக்கிழமை. இரவு 7.00 மணிக்கும் ஆக.18 ஞாயிற்றுக்கிழமைளில் வண்டி எண்.06296 புறப்பட்டு மறுநாள் காலை 9.10 மணிக்கு மைசூர் சென்றடைகிறது. இந்த சிறப்பு இரயில் வண்டியில் காரைக்குடி வரும் பயணிகள் மற்றும் காரைக்குடியிலிருந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கையை கணக்கில் எடுப்பார்கள். அதன் பின்பு பெங்களுர் To காரைக்குடி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரயிலை இயக்க ரயில்வே போர்டு பரிந்துரை செய்யும்.