Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

காவல் உதவி ஆய்வாளருக்கான பதவி உயர்வில் அரசு பாரபட்சம் காட்டக் கூடாது: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: காவல் உதவி ஆய்வாளருக்கான பதவி உயர்வில் அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 2002 முதல் 2010ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த காவலர்களுக்கும் எஸ்.எஸ்.ஐ. பதவி உயர்வை தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; "தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையின் படி 2002ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த காவலர்களுக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு மறுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனவே 2002 முதல் 2010 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த காவலர்களுக்கும் சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி உயர்வை வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.