Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 24 பதக்கத்துடன் இந்தியாவுக்கு 2வது இடம்

குமி: தென்கொரியாவில் உள்ள குமி நகரில் 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. 43 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் இந்தியா 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்கள் குவித்து பட்டியலில் 2-வது இடம் பிடித்தது. சீனா 15 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என 26 பதக்கங்கள் குவித்து முலிடமும், ஜப்பான் 4 தங்கம், 10 வெள்ளி, 10 வெண்கலம் என 24 பதக்கங்கள் குவித்து 3-வது இடமும் பிடித்தன.

கடைசி நாளான நேற்று இந்தியா 3 வெள்ளி, 3 வெண்கலம் என 6 பதக்கங்கள் வென்றது. மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பாருல் சவுத்ரி பந்தய தூரத்தை 15:15.33 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் சச்சின் யாதவ் 85.16 மீட்டர் தூரம் எட்டியை எறிந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (86.40) தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.

மகளிருக்கான 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அபிநயா ராஜராஜன், சினேகா, ஸ்ரபானி நந்தா, நித்யா காந்தி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 43.86 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது. ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் அனிமேஷ் குஜூர் (20.32 விநாடிகள்) வெண்கலப் பதக்கம் வென்றார். மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் பூஜா (2:01.89 விநாடிகள்) வெண்கலப் பதக்கமும், 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் (56.46 விநாடிகள்) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.