Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரக்கோணம் கடற்படை விமான தளத்தில் பயிற்சி நிறைவு விழா: நாட்டிற்கு சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை ரர்கள் சிறப்பாக பயன்படுத்த வேண்டும்

அரக்கோணம்: நாட்டிற்கு சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை வீரர்கள் சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அரக்கோணத்தில் இன்று நடந்த கடற்படை விமான தள பயிற்சி நிறைவு விழாவில் கிழக்கு பிராந்திய தளபதி ராஜேஷ் பெண்டார்கர் தெரிவித்தார். ணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளம் உள்ளது. இங்கு நாடு முழுவதும் தேர்வு செய்யப்படும் கடற்படை வீரர்களுக்கு ஹெலிகாப்டர் ஓட்டும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஒரு பெண் உள்பட 18 கடற்படை வீரர்களுக்கு ஹெலிகாப்டர் ஓட்டுதல் பயிற்சி மற்றும் தரைவழி பயிற்சி, பாடசட்ட நெறிகள் குறித்தும் 22 வார கால பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து 104வது பயிற்சி நிறைவு விழா இன்று காலை கடற்படை வளாகத்தில் நடந்தது. விமானதள தளபதி கபில்மேத்தா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி ராஜேஷ் பெண்டார்கர் கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைதொடர்ந்து பயிற்சியில் அனைத்து பிரிவுகளிலும் சிறந்து விளங்கிய வீரர் அபினவ் ரதீக்கு, ‘கேரள கவர்னர் சுழற்கோப்பை’யை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: ட்டிற்காக சேவையாற்ற தங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை வீரர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இன்று பயிற்சி முடித்த நீங்கள் இந்திய கடற்படையின் முன்னணி பிரிவுகளில் உளவு பார்த்தல், கண்காணிப்பு, தேடல், மீட்பு மற்றும் கடற்கொள்ளை எதிர்ப்பு போன்ற நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்ற வேண்டும்.

இந்திய கடற்படையின் விமானங்கள் கடல், நிலம், மலை, தரம் வாய்ந்த இறங்குதளம், அவசரமாக நிறுவப்பட்ட இறங்குதளம் என பலவகையான தளங்களிலும், கப்பல்களில் இருந்து இயங்கும் திறன்வாய்ந்த வீரர்களாக செயல்பட வேண்டும்.

பெண்களுக்கு சமமான தொழில் வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு இந்திய கடற்படையின் உறுதிபாட்டை அடிகோடிட்டு காட்டும் வகையில் சப்-லெப்டினென்ட் சித்தி ேஹமந்த் துபே பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார். இவர் இந்திய கடற்படையின் 2வது பெண் ஹெலிகாப்டர் விமானியாக வரலாறு படைத்துள்ளார்.இவ்வாறு அவர் பேசினார். ரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் இதுவரை 866 வீரர்கள் ஹெலிகாப்டர் ஓட்டுநர் பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.