Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆந்திராவில் சொத்தில் பங்கு கேட்ட அக்காவை கோடாரியால் வெட்டிய தம்பி..!!

ஆந்திரா: ஆந்திராவில் சொத்தில் பங்கு கேட்ட அக்காவை தம்பி கோடாரியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபூர் மாவட்டம் கர்லாடின்னே மண்டலம் பெனகச்சேர்லா அணை கிராமத்தில் வசிக்கும் ஷேக் ஜிலான் பாஷாவுக்கும், குடும்ப உறுப்பினர்களுடன் சில காலமாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வீட்டு நிலம் தொடர்பாக தனது மூத்த சகோதரி மஹ்பூபியுடன் ஜிலான்பாஷா தகராறு செய்தார். அப்போது, ​​ஆத்திரமடைந்த ஜிலான், தன் அக்கா மகபூபியை உடன் பிறந்த சகோதரி என்றும் பாராமல் கோடாரியைக் கொண்டு விரட்டி விரட்டி வெட்டினார்.

அங்கிருந்த மஹ்பூபியின் மகள் ஷகுன்பி தடுக்க முற்பட்ட போது அவரையும் தாக்கினார். அருகில் இருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி காயம் அடைந்தவர்களை மீட்டு அனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் , பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்தனர். தாக்குதலில் ஈடுபட்ட ஜிலான் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் எஸ்ஐ முகமது கவுஸ் விசாரணை நடத்தி வருகிறார். பார்க்க பார்க்க பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.