Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவின் பிரபல இசைமேதை குயின்சி ஜோன்ஸ் மறைவு: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்

மும்பை: உலகின் மூத்த இசையமைப்பாளர்களில் ஒருவரும் ஆங்கில பாடலாசிரியரும் ஏராளமான இசை ஆல்பங்களின் தயாரிப்பாளருமான அமெரிக்காவை சேர்ந்த குயின்சி ஜோன்ஸ் மரணமடைந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த குயின்சி ஜோன்ஸ்லாஸ் ஏஞ்ஜெல்சில் தனது 91வது வயதில் உயிரிழந்தார். இசை ரசிகர்களால் கியூ என்று அழைக்கப்பட்ட குயின்சி 1964 ஆம் ஆண்டு தி பான் பிராகர் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தன்னுடைய இசை பங்களிப்பால் பல நூறு விருதுகளை வாங்கி குவித்தவர்.

கிராமிய விருதுகளுக்காக 80 முறை பரிந்துரைக்கப்பட்டு 28 கிராமிய விருதுகளை பெற்றுள்ளார்.

மைக்கல் ஜாக்சனின் புகழ்பெற்ற ஆல்பங்களான திரில்லர், ஹாஸ்ட் வால் மற்றும் பேட் ஆகியவற்றை தயாரித்து வெளியிட்டுள்ளார்.1980 களில் எத்தியோப்பியாவை கலங்கடித்த வறுமையிலிருந்து அந்நாட்டு மக்களை மீட்க நன்கொடை வசூலிப்புக்காக இவர் தயாரித்த பாடல் பல நூறு கோடி ரூபாயை குவிய காரணமானது என்பது குறிப்பிடத்தக்கது. குயின்சி ஜோன்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஒரு மிளிரும் நட்சத்திரம் அமரத்தன்மை அடைந்துவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.