Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார்; நடிகர் நிவின் பாலியிடம் போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி இளம் நடிகர் நிவின் பாலி. மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப், நேரம், தட்டத்தின் மறையத்து, 1983, ஓம் சாந்தி ஓசானா, பிரேமம் உள்பட ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் நேரம் ரிச்சி உள்பட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் நிவின் பாலி, மலையாள சினிமா தயாரிப்பாளர் சுனில் உள்பட 6 பேர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு துபாயில் உள்ள ஒரு ஓட்டலில் 3 நாள் பூட்டி வைத்து மயக்க மருந்து கலந்து கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்ததாக எர்ணாகுளம் அருகே நேரியமங்கலம் பகுதியை சேர்ந்த இளம்பெண் கொச்சி ஊன்னுகல் போலீசில் புகார் கொடுத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த புகாரை நடிகர் நிவின் பாலி மறுத்தார். பலாத்காரம் நடந்ததாக இளம்பெண் கூறிய நாட்களில் கேரளாவில் ஒரு சினிமா படப்பிடிப்பில் நிவின் பாலி இருந்ததாக அந்த படத்தின் டைரக்டரான வினீத் னிவாசன் கூறினார். இதற்கிடையே தன் மீது கூறப்பட்ட பாலியல் புகாரில் சதித்திட்டம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறி கேரள முதல்வர், டிஜிபிக்கு நிவின் பாலி புகார் கொடுத்தார். இதற்கிடையே நடிகர் நிவின் பாலியிடம் சிறப்பு விசாரணை குழு போலீசார் இன்று கொச்சியில் விசாரணை நடத்தியது. அப்போது, துபாயில் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் கூறிய நாட்களில் தான் கேரளாவில் இருந்ததற்கான ஆவணங்களை போலீசிடம் தாக்கல் செய்தார்.