Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

என் மீதான குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை: இயக்குநர் அமீர் பேட்டி

மதுரை: மதுரை தமுக்கம் திடலில் நேற்று காலை நடந்த ரமலான் பெருநாள் சிறப்பு தொழுகையில் திரைப்பட இயக்குநர் அமீர் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: என் வீட்டில் நடந்த சோதனையில் என்ன எடுத்தார்கள் என்று சொல்ல முடியாது.

என்சிபி 11 மணி நேர விசாரணை மற்றும் ஈடி ரெய்டு நடந்தது உண்மைதான். ஆனால் என்ன எடுத்துள்ளார்கள் என அவர்கள் தான் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்து நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். எந்த விசாரணைக்கும் நான் எப்போதும் தயார். என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நிரூபிப்பேன்.

என்னை டார்கெட் செய்து விசாரணை நடைபெறுகிறதா எனக் கேட்கிறீர்கள். உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், இதுகுறித்து உறுதியாக ஒரு நாள் பேசுவேன். இந்த சோதனையில் உள்நோக்கம் உள்ளதா என்பதை சொல்ல முடியவில்லை. ஆனால், என்னால் ஒரு மாதமாக பேச முடியவில்லை என்பது உண்மை.

இவ்வாறு கூறினார்.